22ஆம் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கையில் கைச்சாத்து
அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள 22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் நோக்கில் அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் நேற்று குறித்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஏறக்குறைய 80 ஆண்டுகளாக
இது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தம், நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
ஏறக்குறைய 80 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை ஒழிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும் ஒரு தெளிவான வெளியை இது உருவாக்கும் என்று தாங்கள் உறுதியாக நம்புவதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தத்தைத் தோற்கடிக்கவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் ஒருமித்த குழுவாக இந்த அறிக்கையில் கையெழுத்திடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சட்த்தரணி சாகர கரியவசம், துமிந்த திசநாயக்க, சஞ்சீவ எதிரிமான்னே, டிலான் பெரேரா, ரவி கருணநாயக்க, முஜிபுர் ரஹுமான், அஜித் பி பெரேரா, தயாசிரி ஜெயசேகர, எம்.ஏ. சுமந்திரன், ஜி.எல். பீரிஸ், ராஜித சேனரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, சமன் ரத்னப்பிரிய, மைத்ரி குணரத்ன, வஜிர அபேவர்தன மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.