அநுர அரசுக்கு ஏமாற்றமே மிச்சம்.. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சாடல்!

Anura Kumara Dissanayaka Sajith Premadasa
By Rakesh Jul 01, 2025 03:35 PM GMT
Report

அநுர தலைமையிலான திசைகாட்டி அரசு வாக்குறுதிகளை மீறித் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது. தற்போது இந்த அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சிப்போயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "பலவீனமான, வினைதிறனற்ற, பொய் சொல்லும், ஏமாற்றும் தற்போதைய அரசு நாட்டு மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவித்து வருகின்றது. நேற்று திடீரென எரிபொருள்களில் விலை அதிகரிப்பைச் செய்தது.

எரிபொருள் விலையை அதிகரித்த தற்போதைய அரசு, கடந்த தேர்தல் காலங்களில் ஏலவே காணப்படும் எரிபொருள் விலைச்சூத்திரத்தை மாற்றுவோம் எனக் கூறியது. போதாக்குறைக்கு துறைமுகத்தில் இறக்கப்படும் எரிபொருளை அதே விலையில் நுகர்வோருக்கு பெற்றுத் தருவோம் என உரக்கத் தெரிவித்தது. துறைமுகத்தில் ஒரு விலைக்கு இறக்கப்படுகின்றது.

 எரிபொருள் மீதான வரி

பின்னர் பொதுமக்களுக்கு மற்றொரு விலையில் விற்கப்படுகின்றது. ஊழல், மோசடி, திருட்டு மற்றும் இலஞ்சம் போன்றனவையே இதற்குக் காரணம். இவை அனைத்தையும் நிறுத்துவோம், எரிபொருள் மீதான வரிகளை நீக்குவோம். துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையில் எரிபொருளை மக்களுக்கு பெற்றுத் தருவோம் எனத் தற்போதைய ஆளும் தரப்பினர் வாக்குறுதியளித்திருந்தனர்.

அநுர அரசுக்கு ஏமாற்றமே மிச்சம்.. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சாடல்! | Opposition Leader Sajith Chatal

ஆனால், தெளிவான அதிகாரத்தோடு ஆட்சிக்கு வந்த தற்போதைய ஆளும் தரப்பினரால் இன்றளவில் இதில் எதுவும் நடக்கவில்லை. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் கொமிஸ் எடுத்தல் நிறுத்தப்பட்டுள்ளனவா? எரிபொருள்கள் மீதான வரிச்சுமைகள் நீக்கப்பட்டுள்ளனவா? என்பன குறித்து நாம் இந்த அரசிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையில் நுகர்வோருக்கு தற்போது எரிபொருள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும் நாம் இந்த அரசிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

ஐ.எம்.எவ்வின் 4 ஆவது தவணையைப் பெறுவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவே இந்த அரசு இவ்வாறு செயற்பட்டு வருகின்றது. எரிபொருள் விலைச் சூத்திரத்தை மாற்றி அதை மேலும் மக்களுக்கு சாதகமான ஒன்றாக மாற்றியமைப்போம் என்று பிரஸ்தாபித்தவர்கள் இன்றும் கூட முந்தைய அரசின் எரிபொருள் விலை சூத்திரத்தையே பின்பற்றுகின்றார்கள்.

மருத்துவ உபகரணங்கள் 

எரிபொருள் விலையேற்றம் செய்யப்பட்டதன் அடிப்படையை நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்குத் தற்போது தட்டுப்பாடு நிலவுகின்றன.

அநுர அரசுக்கு ஏமாற்றமே மிச்சம்.. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சாடல்! | Opposition Leader Sajith Chatal

உயிர்களைக் காக்கத் தேவையான உபகரணங்கள் போதுமானதாக இல்லை என்று இதற்கு முன்னர் பல தடவை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியது. சில உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காணப்படும் எம். ஆர். ஐ. ஸ்கேனிங் இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டவர்கள் இந்தப் பரிசோதனை நடவடிக்கையை வெளியில் செய்ய வேண்டி வந்திருக்கின்றது.

மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றமை குறித்து எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமான பதில்கள் தெரிவிக்கப்பட்டு, ஆளும் தரப்பினர் எம் மீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.

பொய் சொல்லும் ஏமாற்றும் இந்த அரசின் இலவச சுகாதாரக் கொள்கை இவ்வாறே அமைந்து காணப்படுகின்றது. நாட்டில் கொலைச் சம்பங்களும் அவ்வாறு காணப்படுகின்றன. கொலை கலாசாரம் தொடர்ந்து வருகின்றது.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், குண்டர்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களால் துப்பாக்கிச்சூடுகளும் கொலைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான எந்த வேலைத்திட்டமும் இந்த அரசிடம் இல்லையா?" - என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US