எதிர்க்கட்சித் தலைவர் நன்றியில்லாதவர்-டயனா கமகே
சவரக்கத்தியில் வாகை மரங்களை வெட்ட எதிர்பார்க்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுப்பதாக சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மோதி பார்ப்போம்
என்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து துரத்துவதற்கு அவர் பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. கைவிடப்பட்டு அனாதரவாக இருந்த நேரத்தில் நானே அவருக்கு கட்சியை வழங்கினேன்.
அவருக்கு அதற்கான நன்றி இருக்க வேண்டும். நான் அறிந்தவரையில் அவர் நன்றியில்லாதவர். நாம் மோதி பார்ப்போம். பெண்களை பயன்படுத்தி என்னை விமர்சிக்கின்றனர்.
பெண்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் பெண்கள் என்னை விமர்சித்து வருகின்றனர். நான் பெண் இல்லையா, என்னை பெண்ணாக தெரியவில்லையா. நான் பெண்களுக்காக குரல் கொடுப்பவள்.
இன மத பேதமின்றி அனைத்து பெண்களுக்காக குரல் கொடுப்பவள். இதனால், வெட்கமில்லாமல் செயற்பட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே.
அதேவேளை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் கொள்ளைகளை திருத்தினால், நாட்டை முன்னேற்ற முடியும். தாமரை கோபுரத்திற்கு நான் நேற்று பில்லியன் கணக்கான முதலீட்டை கொண்டு வந்தேன். அடுத்த ஆண்டளவில் தாமரை கோபுரத்தின் கடனை முற்றாக அடைத்து விடலாம்.
தாய்லாந்தில் கஞ்சா சட்டரீதியானது-ஏன் இலங்கையில் முடியாது
[AN7G1
மேலும் கஞ்சா தாய்லாந்து போன்ற பௌத்த நாட்டில் சட்டரீதியானது என்றால், அப்படியான ஒன்றை இலங்கையில் சட்டமாக்க முடியாது?. கஞ்சா ஏற்றுமதியின் பெறுமதியை விளக்கி சபையில் உரையாற்றிய ராஜித சேனாரத்ன அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசாங்கத்தின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட கஞ்சா பற்றி தவறாக பேசுவது பற்றி வருத்தப்படுவதாகவும் டயான கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
