கஞ்சா பயன்படுத்துவதை சட்டமாக்க வேண்டும்! - டயனா கமகே
இலங்கைக்குள் இரவு நேர வாழ்க்கை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், அப்படி ஏற்படுத்தவில்லை என்றால், எதற்காக வெள்ளைகாரர்கள் இலங்கைக்கு வருகிறார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கேள்வியெழுப்பியுள்ளார்.
இணையத்தள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் இப்படியான கலாச்சாரத்தை ஏற்படுத்துவதில் சமயமும், கலாச்சாரமுமே தடையாக உள்ளன.
இலங்கையை தாய்லாந்து போல் மாற்ற வேண்டும். தாய்லாந்து பௌத்த நாடாக இருந்த போதிலும் அங்கு பாலியல் தொழில் சட்டரீதியானது.
நாட்டில் உள்ள பெரிய முக்கியஸ்தர்கள் பாலியல் தொழிலாளிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
எதிர்காலத்தில் பாலியல் தொழில் குறித்தும் சிந்திக்க வேண்டும்.
சாராய தவரணைகள் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதிகளை நீண்ட நேரம் திறந்து வைக்க வேண்டும்.
கஞ்சா பயன்படுத்துவதை சட்டமாக்க வேண்டும் எனவும் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

வெளிநாடுகளில் வேலை செய்ய கனடா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு: ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

சுவிட்சர்லாந்தின் UBS வங்கி Credit Suisse-யை வாங்கிக்கொள்ள ஒப்புதல்., தப்பித்தது ஐரோப்பிய நிதி சந்தை..! News Lankasri

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri
