ஆட்சியை நடத்தும் திறன் எதிரணிகளுக்கு இல்லை: ஜானக வகும்புர
தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியைக் கொண்டு நடத்தும் திறமை இல்லை என இராஜாங்க அமைச்சரும், மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "உள்ளூராட்சி சபைத் தேர்தலை நாம் ஒத்திப்போடுவதாகக் கூறவில்லை.
ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றும் ஆசை
இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுபவர்கள் நிச்சயமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பாதவர்கள். அவர்களால் வெல்ல முடியாது. தோல்விப் பயம் காரணமாகவே அவர்கள் உளறுகின்றார்கள்.
அவர்கள்தான் ஆட்சியைக் கைப்பற்றும் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றும் ஆசையுடன் இருப்பவர்கள்.
முடிந்தால் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 50.1 வீத வாக்குகளை எடுத்துக் காட்டட்டும் என்று சவால் விடுக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
