கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம்! அவசர சந்திப்பில் எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிக்குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
கொழும்பு ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இன்று (25) காலை நடைபெற்றது.
அரசியல் குழப்பம்
எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இச்சந்திப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தரம் குறைந்த நிலக்கரி விவகாரம், பாதாள உலகக் கொலைகள் மற்றும் எரிவாயு பிரச்சினை தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜீ.எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, சாகல ரத்நாயக்க, தலதா அத்துகோரள, பிரேம்நாத் சி. தொலவத்த, சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் திறந்திருப்பதாக ட்ரம்ப்... முற்றுகை அமுலுக்கு வந்ததாக அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை News Lankasri