தேசிய அரசாங்கமொன்றை நிறுவி கோவிட்டிற்கு எதிராக போராடுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை
தேசிய அரசாங்கமொன்றை நிறுவி கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக போராடுமாறு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
தேசிய அரசாங்கத்தைப் போன்றதொரு பொறிமுறைமையை உருவாக்குவதன் மூலம் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கி கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக போராட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் குறைந்தபட்சம் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொண்டு இந்தப் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான அனைத்து திட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளாந்தம் ஒரு லட்சம் தடுப்பூசிகள் குறைந்தபட்சம் ஏற்றப்பட வேண்டுமெனவும் மூன்று மில்லியன் சனத்தொகையைக் கொண்ட கனடாவில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகள் ஏற்றப்படுவதாக அவர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.