காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச மாநாட்டுக்கு எதிரான போராட்டம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்
காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளமையை நாங்கள் அறிவோம் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் சபாரெத்தினம் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (27.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்திற்கு எதிராக செயற்படும் சக்திகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்றைய தினத்தில் வடக்குக் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமானது யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
அன்றைய காலத்தில் பொறுப்பு வாய்ந்த முப்படைகளினுடைய கைகளில் ஒப்படைக்கப்பட்ட அப்பாவி மக்கள் உட்பட சிறுகுழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் அருட்தந்தையர்கள் என பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தினை அடுத்து உலகத்திலேயே இரண்டாவதாக அதிகமான மனிதர்கள் காணாமல் ஆக்கப்பட்ட நாடு என்ற பட்டியலை இலங்கை பெற்றிருக்கின்றது. எம்மை பொறுத்தவரையில் இது மிகவும் வேதனையான ஒரு விடயமாகும்.
இந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டத்தின் முன்னேற்றத்தையும் வலுவையும் குறைப்பதற்காக சில சக்திகள் மற்றுமொரு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை தொடர்பில் நாம் அறிவோம்.
அரசாங்கத்தின் செயற்பாடு
எனவே அவைகள் தவிர்க்கப்பட வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் தான் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்.

கடந்த 25ஆம் திகதி காணாமல் போனோர் அலுவலகம் யாழ். மாவட்ட செயலகத்தில் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தது. அந்த கலந்துரையாடலின் போது உள்ளக பொறிமுறைக்குள் காணாமல்போனோர் அலுவலகத்தின் ஊடாக இழப்பீடு வழங்குதல் மற்றும் காணாமல் போனவர்களுக்கான சான்றிதலை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது அதிகமான நபர்கள் வாகனங்கள் மூலமாக அந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக அரசாங்கம் இந்தப் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri