ஈழத்தமிழ் பெண்கள் இருவர் பிரித்தானியாவில் எம்.பியாகும் சந்தர்ப்பம்
ஈழத்தமிழ் பெண்கள் இருவருக்கு பிரித்தானியாவில் எம்.பியாகும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பிரித்தானிய தொழிற்கட்சி தமிழ் பிரிவுத் தலைவர் சென். கந்தையா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பிரித்தானிய தேர்தல் தொகுதியொன்றில் கிருஸ்னி யசீகரன் என்ற ஈழத்தமிழ் பெண் தொழிற்கட்சி சார்பாக போட்டியிட தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொழிற் கட்சி மாத்திரமல்லாது பிரித்தானியாவிலுள்ள அனைத்து தமிழர்களும் அவருக்கு ஆதரவு வழங்குவார்கள்.
அவரை வெல்லச் செய்வதற்கு ஆவணம் செய்வார்கள். இது ஒரு கடினமான போட்டி. எங்களுடைய ஈழத்தமிழ் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் அரசியலில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் அவர்கள் முழுமனதுடன், எந்த கட்சியிலும் இணைய விரும்பவில்லை.
பிரித்தானியாவில் இந்த முறை வெல்லக்கூடிய ஒரு முக்கிய தொகுதி ஒரு தமிழ் பெண்ணுக்கு கிடைக்க இருக்கிறது. அதற்குரிய நல்ல செய்தி விரைவில் கிட்டும் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |