மாணவர்களுக்கும் பங்குச் சந்தையில் வாய்ப்பு! அநுர அறிமுகப்படுத்திய புதிய திட்டம்
கொழும்புப் பங்குச் சந்தையில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் “அனைவருக்கும் ஒரு பங்கு என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அனைவருக்கும் ஒரு பங்கு
இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 13ஆம் தர மாணவர்களைப் பங்குச் சந்தையில் பங்கேற்க ஊக்குவித்தல். முறையான தெரிவு நடைமுறையின் அடிப்படையில், அதிகபட்சம் 10,000 ரூபாய் பெறுமதியான பங்குத் தொகுப்பை வழங்க முன்மொழிவு.
“அறிவோம், கற்போம், முதலீடு செய்வோம் என்ற தொனிப்பொருளில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் பங்களிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பங்குச் சந்தையில் பட்டியலிட ஊக்குவிக்கும் புதிய பொறிமுறையையும் அறிமுகப்படுத்த முன்மொழிவு.
கொழும்புப் பங்குச் சந்தை
தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கை மக்களில் சுமார் 0.7 சதவீதமானவர்கள் மட்டுமே கொழும்புப் பங்குச் சந்தையில் தீவிரமாகப் பங்குபற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டங்களுக்காக கொழும்புப் பங்குச் சந்தையினால் 250 மில்லியன் ரூபாயும், மேலதிகமாக 500 மில்லியன் ரூபாயும் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் நிதிசார் அறிவையும் முதலீட்டுக் கலாசாரத்தையும் ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.