மீண்டும் QR முறைமை! எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தேவையற்ற முறையில் எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்களை கண்டறிவதற்காக பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை உள்ளடக்கிய விசேட சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களை கைது செய்ய பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.
மீண்டும் QR குறியீடு முறை
குறிப்பாக, விதிமுறைகளை மீறும் நிலையங்களின் எரிபொருள் விநியோக உரிமங்களை (License) ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR code) முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இலியாஸ் முஹம்மது அர்க்காம் தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என உறுதி அளித்துள்ளார்.
செயற்கை தட்டுப்பாடு
QR முறை: "மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளைச் சேகரிக்கத் தொடங்கினால், விநியோகத்தை முறையாக நிர்வகிக்க நாம் மீண்டும் QR குறியீடு முறையை நாட வேண்டியிருக்கும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்குவதைத் தவிர்க்குமாறும், பொறுப்புடன் செயல்படுமாறும் பிரதி அமைச்சர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan