இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை
வவுனியா
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக வவுனியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் மாலை முதல் நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது.
தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி - தீபன்

மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
கிண்ணியா
மத்திய கிழக்கில் (ஈரான் - இஸ்ரேல்) ஏற்பட்டுள்ள போர் பதற்றம், உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக கிண்ணியாவிலும் இன்று மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் மக்கள் அலைமோதி வருகின்றனர்.
செய்தி - கியாஸ் சாபி

திருகோணமலை
திருகோணமலை மாவட்டம் பகுதிகளில் நேற்று இரவு (28 ) மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று இரவு நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
லிங்கநகர், கிண்ணியா, மூதூர் மற்றும் புல்மோட்டை பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் காத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
செய்தி - யுசுப்
நுவரெலியா
நுவரெலியா பிரதான நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை இன்று காலை (01/03/2026) முதல் காணப்படுகிறது.
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.
மேலும் நுவரெலியா பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்தி - திவா

புத்தளம்
மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், அமெரிக்க,இஸ்ரேல் தாக்குதல்களை அடுத்து எரிபொருள் நிலையங்களில் மக்கள் வரிசைக்கிரமமாக நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.
புத்தளம்,புளிச்சாக்குளம் எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களுடன் மக்கள் வரிசையாக (1) இன்று நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.






ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam