இன, மத அடையாளங்களுடன் செயற்படும் கட்சிகளை எதிர்காலத்தில் இல்லாமல் செய்ய வேண்டும் - நிமல் ஜி புஞ்சிஹேவா வலியுறுத்து(Video)
இலங்கையில் இன,மத அடையாளங்களுடன் செயற்படும் கட்சிகளை எதிர்காலத்தில் இல்லாமல் செய்யவேண்டிய தேவையுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் மக்கள் மயப்படுத்துவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
மட்டக்களப்பு, நாவற்குடாவில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டுள்ளார்.
இதன்போது உத்தேச நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயல்முறைகளும், இது தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள கருத்துக்களும் பெறப்பட்டுள்ளது.
தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு முன்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் பெறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா கருத்து தெரிவிக்கையில்,
“பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளடக்கப்படாத தேர்தல் ஒன்று நியாயமான தேர்தலாக உள்ளடக்கப்பட முடியாது.
சிறந்த அரசியல் கட்டமைப்பு
தேர்தல்கள் மூலம் பெண்கள், இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் உள்ளடக்கப்பட வேண்டும். தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் சிறந்த அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் சட்டத்தில் செயற்படுத்தப்பட வேண்டும். ஒரு அரசியலில் பிரவேசிக்கும் உறுப்பினரின் சொத்து விபரங்களை பொதுமக்கள் அறிய வேண்டும், ஒருவர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவாராயின் அவரது பதவி பறிக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் அமைய வேண்டும்.
நீதியான, நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்
தேர்தல் குற்றங்களை விசாரணை செய்யும் வகையில் தேர்தல் நியாய சபையொன்று உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் நீதியான நியாயமான தேர்தல் ஒன்று நடாத்துவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த முடியும்.
இன, மதம் என்ற அடிப்படையில் 1933ஆம் ஆண்டு தொடக்கம் இன ரீதியான கட்சிகள் தோற்றம்பெற்றன. இவ்வாறான கட்சிகள் மூலம் பிரித்தாளும் நிலைமையினை இல்லாமல் செய்யவேண்டும்.
இவ்வாறான கட்சிகளுக்கு எதிராகவும் சில தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலையுள்ளது. மாகாணசபை தேர்தல்கள் நடைபெற்று நீண்டகாலம் சென்றுள்ளது.
இன்று மாகாணசபைகள் உள்ளதா? என்னும் நிலை காணப்படுகின்றது. மக்கள் சபைகளை வேறு நபர்கள் ஆட்சி செய்வதற்கு அனுமதிக்க முடியாது.
நாங்கள் சில விடயங்களை செய்யவேண்டும். இல்லாது போனால் எமது எதிர்கால சமூகத்திற்கு நாங்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையேற்படும்.“ என தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள், கல்விப்புலத்தோர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக்கொண்டுள்ளார்கள்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
