பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையால் மீண்டும் இரு வான் கதவுகள் திறப்பு
வவுனியா, பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ளமையால் அதன் இரு வான் கதவுகள் மீள திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் (K.Himachal) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த வாரம் பெய்து வந்த கனமழையானது குறைவடைந்துள்ள போதும், வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பல குளங்கள் வான் பாய்ந்து வருவதனாலும், தாழ்நிலப்பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடிந்து வருவதனாலும் பாவற்குளத்திற்கான நீர்வரத்து மீள அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகள் அரை அடி ஆழத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய இரு வான் கதவுகளும் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் இரவு வேளை திறக்கபடும்.
குளத்தின் நீர் கொள்ளளவை பேணும் வகையில் குறித்த வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.இதனால் மக்களுக்கு பெரியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் குறைவாக உள்ளது. எனினும் நீர் வழிந்தோடும் பகுதி மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்தும் பின்பற்றவும் எனவும் தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri