இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடமாகாணத்தில் இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இதன் போது கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்திற்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிக நீர் வரவு காரணத்தினால் இன்று (28) அதிகாலை 6 மணி அளவில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன, இரண்டு வான் கதவுகள் 6 அங்குலத்திற்கும், இரண்டு வான் கதவுகள் 12 அங்குலத்திற்கும் திறக்கப்பட்டுள்ளன.
எனவே தற்போது வெளியேறுகின்ற நீர் காரணமாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று காலை திறக்கப்படும் எனவும், மக்களை அவதானமாகச் செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குளத்தின் நீரேந்தும் பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும், கனகராயன் ஆற்றினூடாக வரும் நீர் காரணமாக நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்படாவகையில் வான் கதவுகளைக் கண்காணிப்பின் அடிப்படையில் படிப்படியாகத் திறக்க ஏற்கனவே நீர்ப்பாசன திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை இரண்டு வான்கதவுகள் திறக்கப்படும்.
எனவே பன்னங்கண்டி, கண்டாவளை, முரசுமோட்டை, ஊரியான் உள்ளிட்ட தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் அவதானமாகச் செயற்படுமாறும், வாழ்வாதாரங்கள், கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையிலும், வெள்ள அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வான் பாய்வதைப் பார்த்தல் மற்றும் தாழ்நில பகுதிகளிற்குப் பாதுகாப்பின்றி செல்வதைத் தவிர்க்குமாறும், மீன்பிடித்தல், நீந்துதல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாகச் சிறுவர்கள், முதியவர்கள், நோயாளர்கள் தொடர்பில் அவதானம்
செலுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
