காத்தான்குடி நகரில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளில் வர்த்தக நிலையங்கள் திறப்பு
40 நாட்களின் பின்னர் காத்தான்குடி நகரில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கோவிட் வைரஸ் பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முதல் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் 18 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தொடரான அன்டிஜன் பரிசோதனைகளை அடுத்து குறித்த பிரதேசத்தின் 8 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டது.
இதனை தொடர்ந்தும் கடந்த 40 நாட்களாக 10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் இருந்த நிலையில் இன்று முதல் 4 வீதிகளைத் தவிர 10 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தததுடன், பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பனவும் திறக்கப்பட்டன.






தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan