வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வீதி போக்குவரத்துக்கு தடை
வவுனியா, பாவற்குளத்தின் வான் கதவுகள் 2 அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளதால் நெளுக்குளம் - நேரியகுளம் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.
பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை அடைந்துள்ளதால், அதன் ஒரு வான் கதவுகள் இரண்டரை அடியும், மூன்று வான்கதவுகள் இரண்டு அடியும் திறக்கப்பட்டுள்ளன.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் குளத்து நீர் நெளுக்குளம் - நேரியகுளம் வீதியை மேவி பாய்ந்து வருவதால் அந்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அத்துடன், பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri