கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தினூடாக திறக்கப்பட்ட பொதுச் சந்தை
புதிய அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தினுடாக கொக்கொட்டிசோலை (Kokkadicholai) பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக இன்று (11) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த கொக்கொட்டிசோலை பொதுச் சந்தையானது கடந்த நான்கு வருடங்களாக இயங்காத நிலையில் காணப்பட்டு வந்தது.
கொட்டும் மழையிலும் இன்று கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தினுடாக புது வருடத்தை முன்னிட்டு இந்த பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டது.
பொதுச் சந்தை
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக நிரந்தரமான ஒரு பொதுச் சந்தை வசதி இன்றி மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இவ்விடயம் சம்பந்தமாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் கவனத்திற்கு பொது மக்கள் கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து தமிழர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் விழாவின் போது தேவையான அத்தியாவசிய பொருட்களை மிகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri