இலங்கை அரசின் கடும்போக்கு நடவடிக்கைகள் தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றத்தின் தீர்ப்பு
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக முறியடிக்கப்பட்டிருந்தாலும் தமிழீழ கோரிக்கை என்பது தமிழர்களிடையே பரவலாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பதை இலங்கை அரசாங்கம் நம்புவதாக பிரித்தானிய நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட முக்கிய தீர்ப்பு வெளிப்படுத்துவதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சிரேஸ்ட சட்டவாளருமான அருண் கனநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக முறியடிக்கப்பட்டிருந்தாலும் தமிழீழ கோரிக்கை என்பது தமிழர்களிடையே பரவலாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பதை இலங்கை அரசாங்கம் நம்புவதாக இந்த தீர்ப்பின் மூலம் தெரியவருகிறது.
முக்கியமாக வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள் தனிநாட்டு கோரிக்கையை ஒரு கொள்கையாக தமது அமைப்புகளின் விஞ்ஞாபனத்திலோ அல்லது அரசியல் அமைப்புகளிலோ உள்வாங்காவிட்டாலும் அதை தான் உள்நோக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்று தான் இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு புலம்பெயர் செயற்பாட்டாளர்களை பார்க்கிறது என்பது இந்த தீர்ப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழீழ சிந்தனை என்பது இன்று தமிழ் மக்களிடையே ஊறிப்போய் இருக்கிறது. அதை இலங்கையின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இலங்கை அரசாங்கம் பார்க்கின்றது என்பதை தான் இந்த தீர்ப்பு கூறுகிறது என குறிப்பிட்டுள்ளார்.