கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் முச்சக்கர வண்டிகள் அறிமுகம்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளை அறிமுகம் செய்வது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று சக்கரங்களை உடைய சிறிய வாகனங்களை பரீட்சார்த்த அடிப்படையில் முக்கிய நகரங்களில் சோதனையிட திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டங்களில் சில திருத்தங்கள்
முச்சக்கர வண்டிகளுக்கு அனுமதி அளிப்பதற்காக சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் இந்த விடயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறிய ரக வாகனங்கள்
சுற்றுச் சூழலுக்கு பாதகம் இல்லாத மற்றும் மலிவான போக்குவரத்து வாய்ப்புகள் குறித்து வரவு செலவு திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
சிறிய ரக வாகனங்களை வீதியில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.