பேய்கள் மரம் ஏறும் நேரத்தில் கையெழுத்திட்ட யுகதனவி உடன்படிக்கை பற்றி பேய்கள் மட்டுமே அறியும்
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமை நாட்டின் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளும் நடவடிக்கையாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்(Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
நடு இரவில் பேய்கள் மரம் ஏறும் நேரத்தில் கையெழுத்திட்ட உடன்படிக்கையில் உள்ள விடயங்களை பேய்கள் மாத்திரமே அறியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகில் எந்த நாடும் நாட்டின் மின் விநியோகத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது துப்பாக்கியால் செய்யும் விடயங்கள் மாத்திரமல்ல, இதற்கு தண்ணீர், மின்சாரம் உட்பட மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் அடங்கும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri