நாளையதினம் பதிவு திருமணங்களுக்கு மாத்திரம் அனுமதி
இன்றிரவு 11 மணிமுதல் மூன்று நாட்களுக்கு உத்தியோகப்பூர்வமற்ற ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் நாளை (14) பதிவுத் திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட கோவிட் -19 சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் திருமணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் திருமணங்களை நடத்தச் சுப நாளாக நாளையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதால், சுகாதார வழிகாட்டல்கள் கடுமையான அமுல்படுத்தப்படும்.
அதேவேளை பதிவுத் திருமணங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும்.
நாளையதினம் பதிவுத் திருமணங்களை நடத்த வேண்டுமாயின் தமது பிரதேசங்களில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
