மைத்திரிக்கு மட்டுமே புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டன : பொலிஸ் மா அதிபர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு (Maithripala Sirisena) மட்டுமே புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன (C.D.Vikramaratne) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளித்த போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்க காலத்தில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலைகளினால் சில முக்கியமான புலனாய்வுத் தகவல்கள் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு மட்டும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும், அரச புலனாய்வுப் பிரிவு தலைமை அதிகாரிக்கும் இடையில் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலளார், பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படையின் தளபதிகள் ஆகியோருக்கு புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்த விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
