காற்றின் தரம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கேகாலையில்(Kegalle) மாத்திரம் தரமான காற்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன உமிழ்வு சோதனையின்படி, நேற்று பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவில் காற்றின் தரம் பதிவாகியிருந்தது.
எனினும், கேகாலையில் மட்டுமே நல்ல நிலையில் காற்றின் தரம் பதிவாகியிருந்தது.
இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் கடந்த பல மாதங்களாக காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
சுவாச நோய்கள்
இந்தியா, பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளின் மாசுக்காற்று, வானிலை மாற்றங்களினால் இலங்கைக்குள் வருவதே இதற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுவாச நோய்கள் உள்ளவர்கள் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்று சுகாதார துறையினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |