21 சதவீத பேர் மட்டுமே தொடர்ச்சியான சிகிச்சை பெறுகின்றனர்: சுகாதார அமைச்சர் நளிந்த
இலங்கையில் நீரிழிவு நோயாளிகளில் 21% பேர் மட்டுமே தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சின் தரவுகளின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் சுமார் 25% பேர் வழக்கமான பராமரிப்பில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விசேட மருத்துவ பிணியாய்வு திட்டம்
இலங்கையில் உள்ள 24 சிறைச்சாலை மருத்துவமனைகளில் விசேட மருத்துவ பிணியாய்வு திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொற்றாத நோய்கள் அதிகரிப்பதையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
தொற்றாத நோய்களின் அதிகரிப்புக்கு மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் காரணம் என்றும், நோய் முகாமைத்துவத்துக்கு தடையற்ற சிகிச்சையின் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
சுகாதாரப் பரிசோதனை
கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் சுகாதாரப் பரிசோதனைகளுக்கு உட்படுவதாகவும், அதேநேரம் ஆண்கள் மற்றும் தொழில்நிபுணர்கள் இவ்வாறான பரிசோதனைகளில் ஈடுபடும் வீதம் குறைவாகவே உள்ளதாக அமைச்சின் தொற்றாத நோய் பிரிவின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam
