தனியார் பேரூந்து சேவையில் நெருக்கடி! 20வீதமான பேரூந்துகள் மாத்திரமே சேவையில்!
5000 பேரூந்துகள்
டீசல் பற்றாக்குறை காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் குறைந்தது இருபது வீதமான (5,000 பேருந்துகள்) மாத்திரமே நாட்டில் சேவையில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் இக்கட்டான நேரத்தில், மொத்த பேருந்துகளில் 50% (18,000) சேவையில் ஈடுபட்டு வந்தன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
டீசல் வரிசை
டீசலைப் பெற்றுக்கொள்ள பேருந்துகளை நீண்ட வரிசையில் நீண்ட வரிசையில் நிறுத்த வேண்டியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகள், தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருளை விநியோகித்த போதிலும் இன்னும் குறைபாடுகள் இருப்பதாக விஜேரத்ன கூறியுள்ளார்.
அண்மைய வரி திருத்தத்தின் பின்னர் ஏற்பட்ட விலை உயர்வை தாங்க முடியவில்லை.
டயர்கள், டியூப்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மாணவா்களுக்கான சேவை
எனினும் இரண்டாம் தவணை இன்று ஆரம்பித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்களின் வசதிக்காக பல பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக கெமுனு குறிப்பிட்டுள்ளார்.





நிலாவிடம் வம்பிழுத்தவர்களை தரமான சம்பவம் செய்த குடும்பத்தினர்.. அய்யனார் துணை தெறிக்கும் எபிசோட் Cineulagam
