தொடருந்து பயணச்சீட்டுக்களி்ல் ஏற்படவுள்ள மாற்றம்
இனிவரும் காலங்களில் இணையவழியினூடாக தொடருந்து பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் தொடருந்து திணைக்க பொதுமுகாமையாளர் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இன்று(17.09.202) தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.
பயணச்சீட்டுக்களை இணையவழியில்
அதன் பிரகாரம் தொடருந்துப் பயணிகள் பயணச்சீட்டுப் பெற்றுக் கொள்வதற்காக இனிவரும் காலங்களில் தொடருந்து நிலையங்களுக்குச் செல்லத் தேவையில்லை.

அதற்குப் பதிலாக தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தொடருந்து பயணச்சீட்டுக்களை இணையவழியினுடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்பிரகாரம் www.pravesha.lk எனும் இணையத்தளத்தை அணுகுவதன் ஊடாக பயணிகள் தங்கள் பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதேபோன்று pravesha மொபைல் செயலி ஊடாகவும் தங்களுக்கான பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.