சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை
சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்கு தேவையான மருத்துவச் சான்றிதழை ஒன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் அச்சிடப்பட்ட நகல் வடிவில் மருத்துவச் சான்றிதழை வழங்கும் செயற்பாட்டில் முறைகேடுகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறை
சாரதி அனுமதிப் பத்திரம் காலாவதியாகும் போது, அதைப் புதுப்பிக்க வேரஹெராவுக்கு செல்ல வேண்டும். இது மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது.
கைரேகை தேவைப்படுவதால் மட்டுமே வேரஹெராவுக்கு செல்வது கட்டாயமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள நடைமுறையை ஒரு மாதத்திற்குள் மாற்றி, சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வேரஹெராவுக்கு செல்லாமல் எளிதாக செய்யக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்கவுள்ளதாக அவர் கூறினார்.
ஆரம்ப கட்டப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஒரு மாதத்திற்குள் வேரஹெரவிற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
