புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்! இணையவழி போராட்டம் இன்று ஆரம்பம்
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து "புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்" என்ற தொனிப்பொருளில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று(16.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி போராட்டம் ஆரம்பம்
நேற்று(16) திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த போராட்டம், இன்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார், ஏனைய மதகுருக்கள் குறித்த சட்டங்களை எதிர்த்து கையொப்பமிட்டனர்.
அத்துடன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கலந்து கொண்டுள்ளார்.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறோம் புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற உறவுகளும் கையொப்பமிடும் வகையில் இணையவழி மூலமான கையொப்பமிடும் வசதியும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam