அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை

Trincomalee Sri Lankan protests Attempted Murder Sri Lankan Peoples Gun Shooting
By Kiyas Shafe Feb 16, 2026 07:00 AM GMT
Report

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட மிலேச்சத்தனமான சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் இன்று(16.02.2026) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மின் கட்டண குறைப்பு தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து வெளிவந்துள்ள தகவல்

மின் கட்டண குறைப்பு தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து வெளிவந்துள்ள தகவல்

இரட்டை கொலை

.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ராஜீவ் அமரசூரியவின் அழைப்பிற்கு இணங்க, நேற்று(15) மாலை இடம்பெற்ற விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

இதன்படி, திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் புண்ணியவதி துஷ்யந்தன் தலைமையில் இன்று(16) காலை ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், கறுப்புப் பட்டி அணிந்து தமது கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.


நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது..

இதன்போது கருத்துத் தெரிவித்த தலைவர் புண்ணியவதி துஷ்யந்தன், "சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டப் போராடும் ஒரு சட்டத்தரணிக்கே இந்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பது மிக மோசமான நிலைமையாகும்.

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இந்த 'கொலை கலாசாரம்' உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். எமது சக சட்டத்தரணியினதும் அவரது மனைவியினதும் படுகொலை ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.

குற்றவாளிகள் தராதரம் இன்றி உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை எமது போராட்டங்கள் ஓயாது," என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

கொழும்பில் காதலனை தந்தையென கூப்பிட மறுத்த பிள்ளையை கொலை செய்த இளம் தாய்

கொழும்பில் காதலனை தந்தையென கூப்பிட மறுத்த பிள்ளையை கொலை செய்த இளம் தாய்

இலங்கைக்கு ஒரு நாளில் வருகை தந்த பல தனியார் ஜெட் விமானங்கள்!

இலங்கைக்கு ஒரு நாளில் வருகை தந்த பல தனியார் ஜெட் விமானங்கள்!

நுவரெலியா 

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று(15) தீர்மானம் எடுத்துள்ளது.

இதற்கு ஆதரவு தெரிவித்து, இன்று(16.02.2026) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு

இதன்போது, நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஹட்டன் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

சட்டதரணிகள் வருகை தராததன் காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றங்களின் சில வழக்குகள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு வந்திருந்த வழக்குகளுக்கு வழக்கறிஞர்கள் முன்னிலையாகாத காரணத்தால் அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

மேலதிக தகவல் - தீவாகரன்

மட்டக்களப்பு 

கொழும்பில் சட்டத்தரணியொருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் படுகொலைசெய்த கொலையாளிகளை கைதுசெய்து சட்டத்தினை நிலைநாட்டுமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் இன்று(16.02.2026) நீதிமன்ற கடமைகளிலிருந்து விலகி இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.


சட்டத்தரணிகளின் கோரிக்கை

இதன்போது, சட்டத்தரணிகள் உட்பட பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகும் சூழ்நிலையேற்றபட்டுள்ளதன் காரணமாக துப்பாக்கிதாரிகள் கைதுசெய்யப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் அமைதி முறையில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் தியாகேஸ்வரன் தலைமையில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதுடன் சட்டத்தரணிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

மேலதிக தகவல் - குமார்

 அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட மிலேச்சத்தனமான சம்பவத்தைக் கண்டித்து, கந்தளாய் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று(16.02.2026) பாரிய கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று(16.02.2026) காலை கந்தளாய் நீதிமன்றத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், தமது கைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்து, கண்டனப் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது இந்த இரட்டைப் படுகொலையை வன்மையாகக் கண்டித்த அவர்கள், குற்றவாளிகளுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தினால், கந்தளாய் நீதிவான் நீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்தன.

கோரிக்கை

சட்டத்தரணிகள்எவரும் இன்று நீதிமன்றக் கடமைகளில் ஈடுபடாது தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதால், வழக்கு விசாரணைகள் அனைத்தும் தடைப்பட்டன.

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

நீதித் துறையைச் சார்ந்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இத்தகைய வன்முறைகள் ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் எனப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

சட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியவர்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது கவலைக்குரியது எனத் தெரிவித்த சட்டத்தரணிகள், இச்சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

மேலதிக தகவல் - யூசுப்

யாழ்ப்பாணம்

சட்டத்தரணி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று(16.02.2026) முழு நேர பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். சட்டத்தரணிகளின் குறித்த போராட்டத்தால் யாழில் இன்று வழக்குகளை எதிர்கொண்ட பலர் இடர்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவியும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கருதப்படுகின்றது.

நாட்டில் 7 துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவு

இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

அத்துடன், இந்த தாக்குதல் நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தல் என்றும், குற்றவாளிகளைத் தாமதமின்றி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

மேலதிக தகவல் - தீபன்

வவுனியா

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவிலும் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்- திலீபன்

கல்முனை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று கல்முனை நீதிமன்ற வளாகம் முன்பாக அமைதியான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கான விசேட பொதுக்கூட்டம் இன்று கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற பின்னர் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் கருப்பு பட்டி அணிந்த சட்டத்தரணிகள், “சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுக”, “சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு வழங்குக” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும், அதனை பிரதிபலிக்கும் பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

இச்சம்பவம் சட்டத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். சட்டத்தரணிகள் தங்களது தொழில்பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என கல்முனை கிளை தலைவி, சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் இதன்போது வலியுறுத்தினார்.

“ஒரு சட்டத்தரணி மீது நடத்தப்படும் தாக்குதல், முழு நீதித்துறையின்மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அரசின் பொறுப்பாகும்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான துரிதமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம்,” என அவர் இங்கு குறிப்பிட்டார்.

இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உறுப்பினர்களான சட்டத்தரணிகள், இன்று (16) நாடு முழுவதும் எந்தவொரு வழக்குகளுக்கும் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் இருக்க தீர்மானித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை | Lawyers Protest Over Akuregoda Double Murder

இத்தீர்மானம் கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்க விசேட பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதுடன் சட்டத்துறையின் பாதுகாப்பும் சுயாதீனத்தன்மையும் குறித்து எழுந்துள்ள அச்சங்களை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்- பாரூக் ஷிஹான்

GalleryGalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US