கருத்து சுதந்திரத்தை முடக்கும் அரசாங்கத்தின் திட்டம்: மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம்
அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் வெளியிட்டுள்ளது
இந்நிலையில் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய-பசுபிக் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கருத்து சுதந்திரம்
“நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும்.
அத்துடன் எதிர்வரும் தேர்தல்களின் போது பொதுமக்களின் சுயாதீனமான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் பாதிக்கும் தவறான அரசியல் தலைமைத்துவம் காரணமாக பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்ட இலங்கை போன்ற நாடுகள், இவ்வாறான சட்டமூலங்களின் ஊடாக தொடர்ந்தும் பொருளாதார வீழ்ச்சியையே எதிர்கொள்ளும்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |