ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
ஒன்லைன் முறையின் மூலம் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பதாரிகள் சரியான தரவுகளை சமர்ப்பிக்காத காரணத்தினால், இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள்
“ஒன்லைனில் கடவுச்சீட்டு பெறும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்பவர்கள் சரியான தகவல்களை உள்ளிடாததால், பிரச்னைகள் எழுந்துள்ளன.
சிலர் பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி இலக்கங்களை உள்ளீடு செய்துள்ளனர். இதன் காரணமாக அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்படலாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
