சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இலங்கை சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் ஏலம் விடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருகொடவத்த பகுதியில் உள்ள சுங்க முனையத்திற்கு நேற்றைய தினம் (22.09.2023) ரஞ்சித் சியம்பலாபிட்டிய கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்கள்
மேலும் தெரிவிக்கையில், இதுவரையில் 18765 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனூடாக அரசாங்கத்திற்கு 14 கோடி ரூபா வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |