தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி தொடரும் போராட்டம்
யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விகாரையை அகற்றுமாறு கோரி
ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு, கைகளில் கறுப்பு கொடிகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், பொதுமக்கள் மற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அகற்றுமாறு கோரி மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan