மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மக்கள்
நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களிலிருந்து விடுபட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் கணக்கில் வெளியிட்ட பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களிடையே செலவிட்டதாகவும், மக்களின் அன்பை நன்கு அறிந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, அதன் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளதென மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் உறவு
மேலும் இதுவொரு அரசியல் உறவு மட்டுமல்ல, இதயப்பூர்வமான பிணைப்பு என்பதால், அதை உடைப்பது கடினம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அவற்றை உடைப்பதற்கான முயற்சிகள் மூலம் இன்னும் அதிகமான பிணைப்புகளை வலுப்படுத்த முடியும் என்றும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
மக்களுடன் செலவழித்த இந்த நேரம் முழுவதும் ஒரு தலைவராகப் பெறக்கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சியை அனுபவித்ததாக முன்னாள் ஜனாதிபதி, தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri