பொருளாதார நெருக்கடி:தேனீர் அருந்துவதை குறையுங்கள் மக்களுக்கு அறிவித்துள்ள பாகிஸ்தான்
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தினமும் அருந்து தேனீர் கோப்பைகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம், அந்நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானே உலகில் மிக அதிகளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடு என கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுமார் 600 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை இறக்குமதி செய்தது. பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது.
தினமும் ஒரு தேனீர் கோப்பை

அத்துடன் அந்நிய செலாவணி கடுமையாக குறைந்துள்ளதால், இறக்குமதிகளுக்காக செலுத்த நிதி இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.
இதனால், தேனீர் அருந்துவதை குறைத்துக்கொள்ளுமாறும் தினமும் அருந்து தேனீர் கோப்பைகளின் எண்ணிக்கையை ஒன்று முதல் இரண்டு என்ற எண்ணிக்கையாக குறைத்துக்கொள்ளுமாறு பாகிஸ்தான் அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam