இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை வழங்கும் அமெரிக்கா
இலங்கைக்கு 120 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் அனுமதியளித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் இன்று அறிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்வதற்கு ஆதரவளிப்பதற்காக இந்த கடன் உதவி வழங்கப்படுகின்றது.
அமெரிக்க தூதுவரின் தகவல்
70 ஆண்டுகளாக, இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அமெரிக்கா வெளிநாட்டு உதவிகள், கடன்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை வழங்கியுள்ளது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
அமெரக்காவின் இன்றைய அறிவிப்பு தனியார் துறைக்கு நல்ல செய்தியாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராஜயோகம்! இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்.. உங்கள் ராசி இருக்கா? News Lankasri

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரப்போகிறது... நாம் முன்வரிசையில்: விளாடிமிர் புடினுக்கு உறுதி அளித்த சீன ஜனாதிபதி News Lankasri
