கஹதுடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலி!
கஹதுடுவ - கொரலீம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஹதுடுவ பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்து விலகி கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு வீரர்களும் பனாகொட இராணுவ முகாமில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த இரு வீரர்களும் வெதாரா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
23 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
