தலவாக்கலை பகுதியில் ஒருவர் உயிரிழப்பு - பொலிஸார் வெளியிட்ட தகவல்(photos)
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்றை, குற்றிகளாகவெட்டிக் கொண்டிருந்த நிலையில், மரக்குற்றியொன்று அந்நபரின் நெஞ்சு பகுதியில் மோதியதிலேயே நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டம்
ஹேலீஸ் பிளான்டேசன் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டப்படுகின்றது.
மேற்படி சம்பவதினத்தன்று குறித்த தொழிலாளி ஏற்கெனவே வெட்டப்பட்டிருந்த இரண்டு மரங்கள் ஒன்றோடு ஒன்றாக கீழே கிடந்துள்ள நிலையில் அதிலொரு மரத்தின் மேலே நின்று அதனை குற்றிகளாக வெட்டிக்கொண்டிருந்துள்ளார்.

அதிலொரு மரக்குற்றி, வழுக்கி கொண்டு வந்து குறித்த நபரின் நெஞ்சு பகுதியில் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர்
தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடைய செல்லதுரை மணிமாறன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7