வைத்தியசாலைக்குள் நடந்த பதற்றம் - வன்முறையால் ஒருவர் உயிரிழப்பு
கலவானை வைத்தியசாலையில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கலவானை காலனியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கலவானை காலனியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் 1990 அவசர அம்பியுலன்ஸ் வண்டி சேவையால் கலவானை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மோதலில் மற்ற குழுவை சேர்ந்த ஒருவரும் காயமடைந்து சிகிச்சை பெறுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.
இதன் போது அம்பியுலன்ஸில் கொண்டு வரப்பட்ட காயமடைந்த நபரை மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட போது காயமடைந்த நபரின் சகோதரி தாக்குதலை தடுத்துள்ளார்.
மூன்று சந்தர்ப்பங்களிலும் கத்திக்குத்து முயற்சியை தடுக்கச் சென்ற பெண்ம் காயமடைந்துள்ளார். 1990 அம்பியுலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட காயமடைந்த நபரை தாக்க முயன்ற நபரிடம் இருந்து கத்தியை பறித்து துரத்திச் சென்று கொலை செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கத்திகுத்து மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.