குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி
பதுளையில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பதுளை - எகொடபிட்டிய, பத்தனேகெதர பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்வதற்கான நடவடிக்கை
தம்பகஹாவத்தை, கல்கொடுவேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவரின் சகோதரரும் அவரது மனைவியும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர் எனப் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்கள் இருவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan