முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவு(Mullaitivu) புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (18.04.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
காயமடைந்த நபர் தமது வீட்டிலிருந்து தேவிபுரம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியால் சென்ற போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது.

இதனால் காயமடைந்த அவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam