ஈரானின் தாக்குதல் தொடர்பில் ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை
இஸ்ரேல் (Israel) மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு ஜி7 அமைப்பிடமிருந்து உரிய பதில் கிடைக்க வேண்டும் என ஜேர்மனியின் (German) வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பெயர்பாக் (Annalena Baerbock) தெரிவித்துள்ளார்.
ஜி7 அமைப்புடன் இத்தாலியில் (Italy) இடம்பெற்ற கூட்டத்தில் விவாதித்தது குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ஈரானின் இந்த எதிர்பாராத தாக்குதலுக்கு நிச்சயமாக பதிலளிக்க வேண்டும்.
ஜி7 அமைப்பு
ஏனென்றால், நாங்கள் ஜி7 அமைப்பில் இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள் குறித்து கூடுதலாக விவாதித்து கொண்டு தான் இருக்கின்றோம்.

இந்நிலைமை மேலும் அதிகரித்தால் இரு நாட்டு மக்களுக்கும் ஆபத்து” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த புதன்கிழமை ஜேர்மனியின் சான்சிலரான ஓலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz), இஸ்ரேல் தானாக ஒரு பாரிய தாக்குதலை மேற்கொள்ளாது என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
சிறைச்சாலை மோதல்கள்! உயர் அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் - எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்
காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து