சட்டவிரோதமாக பதுங்கி வைக்கப்பட்டிருந்த டீசலுடன் ஒருவர் கைது (Photos)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டியடிப்பிட்டி பிரதேசத்தில் தேவைக்கு அதிகமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸாரினால் நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெருமளவில் டீசல் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டீசல் நிரப்பப்பட்ட நீர்த்தாங்கிகள்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் ஊழல் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக குறித்த டீசல் நிரப்பப்பட்ட நீர்த்தாங்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சூட்சுமமான முறையில் மூன்று நீர்த்தாங்கிகளில் சேகரிப்பட்டு வைத்திருந்த 3 ஆயிரம் லீற்றர் டீசலே இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட டீசல் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.