திருகோணமலையில் யானை தாக்கியதில் ஒருவர் பலி! மேலும் ஒருவர் படுகாயம்
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர எனும் பகுதியில் வைத்து யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மூதூர் - மல்லிகைத்தீவச் சேர்ந்த 47 வயதுடைய உயிரிழந்துள்ளதுடன், தோப்பூர் நாராயணபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் காயமடைந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள மாங்குளம் என்ற பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுவிட்டு தங்களுடைய வீட்டுக்கு திரும்புகையிலேயே யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் சேருவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
