விருந்தில் நடந்த பயங்கரம் - கொலையில் முடிந்த பரிதாபம்
மொரகஹஹேன தலகல பிரதேசத்தில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள ஏல நிலத்தில் நேற்று இரவு நடந்த விருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர், மினுவாங்கொட, மாபோதல இத்தவத்தையில் வசிக்கும் அகழ்வு இயந்திர சாரதியாக பணிபுரிந்த 39 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
நான்கு வருடங்களுக்கு மேலாக ஏல நிலத்தில் அகழ்வாராய்ச்சி சாரதியாக பணிபுரிந்து வந்த நபர் தனது பணியை நிறைவு செய்துள்ளார்.
மற்றைய தொழிலாளர்கள் அவருக்கு மதுபான விருந்து ஏற்பாடு செய்தமையினால் நேற்று வீட்டில் இருந்து ஏல நிலத்திற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு 10 மணியளவில் மதுபான விருந்து முடிந்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மலிசிறிபுர கிராமப் பகுதிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த நபர் கழுத்தை அமுக்கி தொந்தரவு செய்துள்ளார்.
இதன் போது கோபமடைந்த நபர் பையில் இருந்த கூரான கத்தியை எடுத்து அவர் குத்திகொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொலைக்கு தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
You May Like This Video