மட்டு. கல்லடியில் கோர விபத்து : ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று (16) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மௌலவி எம்.எஸ்.எம். ஸபீர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அரச போக்குவரத்து பேருந்து கல்லடிபால சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்களை செலுத்திய நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - குமார்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 21 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri