கிண்ணியாவில் கோவிட் தொற்றினால் ஒருவர் மரணம்
திருகோணமலை - கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் கோவிட் தொற்றுக்குள்ளாகி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் கிண்ணியா மாலிந்துரை கிராமத்தை சேர்ந்தவர் எனவும், ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். றிஸ்வி குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் இதுவரைக்கும் கிண்ணியா சுகாதார வைத்திய அதகாரி பிரிவில் கோவிட் தொற்றுடன் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட 21 அன்டிஜன் பரிசோதனை முடிவுகளின் படி ஒரே குடும்பத்தை சேர்ந்த 06 நபர்களுக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த தொற்றாளர்கள் மாஞ்சோலைச்சேனை கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி இரண்டாவது அலையின் பின்னர் இதுவரைக்கும் 500 தொற்றாளர்கள் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிண்ணியாவில் கோவிட் தொற்றுக்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று கோவிட் செயலனி கூட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் நாளை முதல் கிண்ணியா பிரதேச மற்றும் நகரசபை எல்லைப்பகுதிகளில் உள்ள அத்தியாவசியத் தேவையான மரக்கறி, மீன், இறைச்சி கடைகள், பேக்கரி, மருந்தகம் தவிர ஏனைய அனைத்து கடைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி குறிபிபட்டார்.
எனவே மக்கள் மிக்க அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் சுகாதார நடைமுறைகளை பேணி அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஸ்வி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.





Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
