நண்பருடன் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த துயரம் - ஒருவர் மாயம்
காலி - கொக்கல ஆற்றுப் பகுதியில் நீராடச் சென்ற இரண்டு நபர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(21.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கல ஆற்றில் இறங்கி இரண்டு நபர்களும் நீந்த முற்பட்ட போதே, எதிர்பாராதவிதமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஒருவர் மாயம்
ஆற்றில் இருவரும் மூழ்கியதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகச் செயற்பட்டு, அவர்களில் ஒருவரை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ள மற்றைய நபரை மீட்கும் நோக்கில், பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கொக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam