புல்மோட்டையில் குடும்ப தகராறில் நபரொருவர் மரணம்(Photo)
திருகோணமலை புல்மோட்டை பகுதியில் நேற்று(20) குடும்ப தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
புல்மோட்டை- அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஜீ.சதாம் (28 வயது) எனபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகராறு

குடும்ப தகராறு காரணமாக மனைவியின் சகோதரர் தாக்கியதிலேயே குறித்த நபர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் படுகாயமடைந்தவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மரணம்

இதன்போது, சிகிச்சை பலனின்றி இன்று(21) காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை புல்மோட்டைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam